Home செய்திகள் தேசிய செய்திகள் சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்களும் நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்களும் நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி, ஆக. 9- பார்லிமென்ட் முடங்கியுள்ள நிலையில், சரத் பவார் அணியைச் சேர்ந்த 8 எம்பிக்களும் நாளை (ஆகஸ்ட் 10) பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என சுப்ரியா சுலே உறுதிப்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவாரும், லோக்சபா எம்பி சுப்ரியா சுலேயும் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அப்போது மஹாராஷ்டிராவின் தொகுதிப் பிரச்னைகள், நீட் தேர்வு விவகாரம் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், மஹாராஷ்டிராவில் எம்பிக்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காதது போன்ற பல்வேறு தொகுதி நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்த அதிகாரப்பூர்வமாக நேரம் கேட்டு, சரத் பவார் அணியைச் சேர்ந்த 8 எம்பிக்களும் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாக சுப்ரியா சுலே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சுப்ரியா சுலே நிருபர்களிடம் கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, சபை செயல்படவில்லை. எங்கள் தொகுதிகளில் பல சவால்களும், பிரச்னைகளும் உள்ளன. அவற்றை எங்களால் எழுப்ப முடியவில்லை. அதனால்தான் எங்கள் 8 எம்பிக்களும் நாளை (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் அலுவலகத்தில் மஹாராஷ்டிரா மாநில பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிரதமரைச் சந்திக்கப் போகிறார்கள். நாங்கள் பிரதமரின் நேரத்தை அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளோம்.