Home செய்திகள் உலக செய்திகள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி

நியூயார்க், ஆக. 16- இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசியக் கொடி (மூவர்ணக் கொடி) பாரம்பரியமாக ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 80வது சுதந்திரத்தை கொடியேற்றி கொண்டாட நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் பகுதிக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடுகள் செய்தது. நியூயார்க் நகரில் இந்தியச் சமூகத்தினரும் அமைப்புகளும் இணைந்து கோலாகலமாக சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர். டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பிரபலங்களும் இந்திய வம்சாவளியினரும் கலந்துகொண்டனர். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் ஜெனரல் பினய் ஸ்ரீகாந்த் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.