
புதுடெல்லி: செப். 1-
ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் கீழ் மூன்று ஏவுகணைகள் இந்தியாவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு ஏவுகணைகள் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. இதனைத் தொடர்ந்து, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை ரஷ்யாவிடம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் விருப்பத்தை ரஷ்ய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது.












