Home மாவட்டங்கள் பெங்களூர் திண்டுக்கல்லில் கொடூரக் கொலை பரபரப்பு

திண்டுக்கல்லில் கொடூரக் கொலை பரபரப்பு

திண்டுக்கல்: செப். 1-
திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமூக்கோவிலூர் பகுதியில் குளிப்பட்டி அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடுதல் மேற்கொண்டனர். இதற்குப் பிறகும் எந்தவித சான்றுகளும் கிடைக்கவில்லை.இந்த நிலையில், குழந்தைப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் தாங்கள்தான் இளைஞரை கொலை செய்ததாகக் கூறி திண்டுக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.அவர்கள் காட்டிய இடத்தில் தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர், இறுதியாக இளைஞரின் உடலை கண்டுபிடித்தனர்.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.