Home மாவட்டங்கள் பெங்களூர் 600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்

600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்

பெங்களூர்: செப்.5-
நெலமங்களா அருகே காரில் கடத்தப்பட்ட 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை தாபஸ்பேட்டை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் நெலமங்களா தாலுகா ஜாஜூர் பகுதியில் தாபஸ்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.
அப்போது காரில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காரில் வெடிபொருட்களை கடத்தி வந்த சிவஷங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கல் குவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஆபத்தான வெடிபொருட்கள், தாபஸ்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத கல் குவாரி தொழிலுக்காக கடத்தி வரப்பட்டது
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சிவஷங்கர் மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.