Home மாவட்டங்கள் பெங்களூர் காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது

காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது

சத்தியமங்கலம்: செப்.5-
சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை மிரட்டிய வழக்கில் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியை மிரட்டியதோடு, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரை கலக்குமாறு கூறியதும் தெரியவந்தது.
இது குறித்து தலைமை ஆசிரியை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆறுமுகத்தை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆறுமுகத்தின் மனைவி அந்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் சமையலராக பணியாற்றி வந்ததும், சமையலில் குறைபாடுகள் இருப்பதால் பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மாணவியை மிரட்டியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அதிர்ஷ்டவசமாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கான சாம்பாரில் விஷப்பவுடர் கலக்கப்படாததால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது.