
திரிசூர்: செப். 5:
கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி மீது கார் மோதியது
தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரில் வந்த மாணவர்கள், குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கைப்பமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-66ல் கார் அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது சாலை விரிவாக்கப் பணி நடக்கும் திருப்பத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது, கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.
8 பேர் உடல் நசுங்கி பலி நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில், காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கி கூளமானது. காரை வெட்டி எடுத்தே உடல்கள் மீட்கப்பட்டன.
விபத்தில் பலியானவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. (PSNA) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலியானவர்களின் உடல்கள் திரிசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














