
புதுடெல்லி: செப். 7-
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதுவரை இரு கட்டங்களாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் பணி நடைபெற்று வருகிறது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15% பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தொகை ஆணையத்தால் செய்ய முடியாத சாதனையை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.
எனவும், இது முறையாக நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஐஆர் பணியின் முக்கியத்துவம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.














