Home செய்திகள் தேசிய செய்திகள் தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவுகள் கைவிடப்படவில்லை

தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவுகள் கைவிடப்படவில்லை

புதுடெல்லி, செப். 10- அமெரிக்கர் உள்பட ஏழு வெளிநாட்டினருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடவில்லை என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்​டைக், கொல்கத்தா விமான நிலையத்தில் மார்ச் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏழு பேர் மீதும் டெல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,
தீவிரவாத தடுப்பு சட்டமான யுஏபிஏ பிரிவுகள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என்பதால், அவை கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் கூறுகையில், “இதுவரை நடந்த விசாரணையின் போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அந்தப் பிரிவுகளின் கீழ் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
யுஏபிஏ பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.