Home செய்திகள் உலக செய்திகள் போரில் 5 லட்சம் பேர் பலி

போரில் 5 லட்சம் பேர் பலி

கீவ்: செப். 12:
உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை கடந்து தொடர்ந்து நடக்கிறது. களத்தில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் மனித மற்றும் ஆயுத இழப்புகளை சந்தித்தாலும், தன் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. எனினும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் வேகம் கணிசமாக குறைந்துள்ளதாக பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை தெரிவிக்கிறது.
பிரிட்டன் ராணுவத் தரவுகளின்படி, கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 15 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
மனித இழப்புகளுடன் சேர்த்து, ரஷ்ய ராணுவம் பல்வேறு முக்கிய ராணுவ உபகரணங்களையும் இழந்துள்ளது. அவற்றில் 10,000க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் அடங்கும். மேலும், 3,000க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள் இழக்கப்பட்டுள்ளன. அத்துடன், 370க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் ரஷ்ய ராணுவத்தின் இழப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
போர் நான்காண்டுகளை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை. களத்தில் ஏற்பட்ட மனித மற்றும் ஆயுத இழப்புகள் இருந்தபோதிலும், தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதே நேரத்தில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் வேகம் கணிசமாக குறைந்திருப்பதாக பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.