
டெஹ்ரான், நவ. 3-
அமெரிக்கா தங்களது முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த இரு நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: அமெரிக்காவுடன் மத்தியஸ்தர்கள் மூலம் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக ஈரான் தரப்பில் முதன்மையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதன்படி,
ஈரானின் எண்ணெய்த் துறை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும். வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள முற்றுகையை கைவிட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். ஓமன் நாட்டின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து வழித்தடத்துக்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.















