Home செய்திகள் உலக செய்திகள் வங்கதேசத்தில் ஜவுளி தொழிலாளர்கள் போராட்டம்; வன்முறை

வங்கதேசத்தில் ஜவுளி தொழிலாளர்கள் போராட்டம்; வன்முறை

டாக்கா, நவ. 3-
ஜவுளித் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறையும் கலவரமும் ஏற்பட்டுள்ளது. 2009 முதல் 2024 வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டின் ஜவுளித் துறை வேகமாக வளர்ந்தது. சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக வங்கதேசம் இரண்டாவது இடத்தில் இருந்தது. வங்கதேசம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை ஆலைகள் செயல்பட்டு வந்தன. ஜவுளித் துறையில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றினர். 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 2024-ல் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி கடந்த பிப்ரவரி வரை நீடித்தது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றார். அவரது அரசும் இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து தரமான பருத்தியை வங்கதேசம் இறக்குமதி செய்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பருத்தி இறக்குமதி நிறுத்தப்பட்டு, உள்ளூர் பருத்தியைப் பயன்படுத்தி ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்பட்டன. தரம் குறைந்த வங்கதேசப் பருத்தியால் வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் போரால் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.