Home செய்திகள் தேசிய செய்திகள் 2 ஆயிரம் போலி பயனாளிகள் மீது நடவடிக்கை

2 ஆயிரம் போலி பயனாளிகள் மீது நடவடிக்கை

கொல்கத்தா: நவ. 14-
முந்தைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலவச வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த 12 ஆயிரம் போலி பயனாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
முந்தைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின்போது போலி பயனாளிகளுக்கு திட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து அந்தத் தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுவரை 1,000 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பச் செலுத்தியுள்ளனர். மற்ற பயனாளிகளும் அதேபோல் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்தத் திட்டத்தின் நிதி முறைகேடான வகையில் சென்றதற்கு உடந்தையாக இருந்த மேற்கு வங்க அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.