Home செய்திகள் தேசிய செய்திகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒப்படைக்க வேண்டும்: பாஜக

ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒப்படைக்க வேண்டும்: பாஜக

புதுடில்லி: நவ. 14-
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், இந்தியா–பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், துப்பாக்கிகளால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றும் கூறியிருந்தார்.இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன், புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:“பரூக் அப்துல்லா இம்முறை நல்ல கருத்தைக் கூறியுள்ளார். காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம். காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதைப் பாகிஸ்தான் ஏற்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பாகிஸ்தானுடனான எங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்” என்றார்.