Home மாவட்டங்கள் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாட உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்புநில வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாட உத்தரவு

சென்னை: நவ. 18 –
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு கிரெடாய் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, சதுப்புநிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதன்படி, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளைச் சுற்றி சுமார் ஒரு
கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.