Home மாவட்டங்கள் சென்னை சென்னை – பரவலாக மழை

சென்னை – பரவலாக மழை

சென்னை: நவ. 24-
சென்னை மாநகர் மற்​றும் புறநகர் மாவட்​டங்​களில் கடந்த இரு வாரங்​களாக கடும் பனிப்​பொழிவும், மழையின்றி வறண்டு காணப்​பட்​டது.
இதன் காரண​மாக கடந்த இரு வாரங்​களாக மாநகர், புறநகர் பகுதி​களில் காற்று மாசு அதி​கரித்​தது. இத​னால், பொது​மக்​கள் ஒவ்​வாமையால் ஏற்​படும் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், சளித்​தொல்லை போன்​றவற்​றால் அவதிப்​பட்டு, சிகிச்சை பெற்று வந்​தனர்.
இந்​நிலை​யில் தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை மீண்​டும் தீவிரமடைந்த நிலை​யில், நேற்று அதி​காலை முதல் ஆங்​காங்கே மழை பெய்து வந்​தது. பின்​னர் பிற்​பகல் வரை வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது.
பின்​னர் பிற்​பகல் 2 மணிக்கு மேல் லேசான மழை பெய்​யத் தொடங்​கியது. தொடர்ந்து விட்​டுவிட்​டுப் பெய்து வந்த மழை, இர​வில் பரவலாக மித​மான மழை பெய்​தது.
மழையால் தியாக​ராயநகர், கிண்டி, அண்ணா சாலை, வேளச்​சேரி, அடை​யாறு, வால்​டாக்ஸ் சாலை, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை உள்​ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்​கிய​தால் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து சென்​றன.
கடந்த ஒரு வார​மாக சென்னை, புறநகரில் கடும் காற்று மாசு நில​வியது. கடந்த வெள்ளி, சனிக்​கிழமை​களில் காற்று மாசு அனுமதிக்​கப்​பட்ட அளவான காற்​றுத்​தரக் குறியீடு 100-ஐ கடந்து 200-க்கு மேல் பதிவானது.