Home செய்திகள் தேசிய செய்திகள் ட்ரோனை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ட்ரோனை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்: நவ. 24-
உள்​நாட்​டுத் தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்ள நாட்​டின் முதல் தானியங்கி ட்​ரோன் எதிர்ப்பு ஏவு​கணை நேற்று வெற்​றிகர​மாக சோதித்​துப் பார்க்​கப்​பட்​டது.
இந்​திய பாது​காப்​புத் துறையை சேர்ந்த ஐஜி டிபென்ஸ் நிறு​வனம், தற்​சார்பு இந்​தியா திட்​டத்​துக்கு ஊக்​கமளிக்​கும் வகை​யில், முற்​றி​லும்உள்​நாட்​டுத் தொழில்​நுட்​பத்​தில் ஜ்வாலா எம்.கே.-1’ என்ற நாட்​டின் முதல் தானியங்கி ஆளில்லா விமான (ட்​ரோன்) எதிர்ப்பு மைக்ரோ ஏவு​கணையை உரு​வாக்கி உள்​ளது.ராஜஸ்தானில் உள்ள பொக்​ரான் ஏவு மையத்​தில், இந்த ஏவு​கணை நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்து பார்க்​கப்​பட்​டது.
“இந்த ஏவு​கணை 2 முதல் 5 கி.மீ. தொலை​வில் உள்ள எதிரி ட்​ரோன்​களை​யும், தரையி​லிருந்து 50 மீட்​டர் முதல் 5,000 மீட்​டர் உயரத்​தில் பறக்​கும் ட்​ரோன்​களை​யும் தாக்கி அழிக்​கும் திறன் வாய்ந்​தது” என்று ஐஜி டிபென்ஸ் தெரி​வித்​துள்​ளது. இதில் ‘கிரிட்’ எனப்​படும் செயற்கை நுண்​ணறிவு அடிப்​படை​யி​லான தானியங்கி செயல்​பாடு மற்​றும் போர் மேலாண்மை மென்​பொருள் முக்​கிய அம்​ச​மாக உள்​ளது. இது பல்​வேறு சென்​சார்​களில் இருந்து கிடைக்​கும் தகவல்​களை கண்​டறிந்து வகைப்​படுத்து​கிறது. மேலும், தாக்​குதல் தொடர்​பான முடிவு​களை எடுக்​கவும், ஏவு​கணைத் தாக்​குதல் நட​வடிக்​கைகளை ஒருங்​கிணைக்​கவும் உதவு​கிறது.