Home செய்திகள் தேசிய செய்திகள் உ.பி.யில் காங்கிரஸுக்கு 26 தொகுதிகள்

உ.பி.யில் காங்கிரஸுக்கு 26 தொகுதிகள்

புதுடெல்லி: நவ. 25-
உத்​தர பிரதேச மாநில சட்​டப்​பேரவைக்கு 2027-ல் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதை​யொட்டி, ‘இண்​டியா’ கூட்டணிக்கட்​சிகளான சமாஜ்வாதி மற்​றும் காங்கிரஸ் இடையே திங்​கள்கிழமை நடை​பெற்ற முதல் கட்​டப் பேச்சு​வார்த்​தையில் 130 தொகுதி​கள் கொண்ட விருப்​பப் பட்​டியலை காங்​கிரஸ் வழங்கி​யிருந்​தது. இந்​நிலை​யில் இரண்​டாம் கட்​டத் தொகுதிப் பங்கீட்​டுப் பேச்சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் கட்​சிக்கு 26 தொகுதி​களை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்​வந்​துள்​ளது.
இது​குறித்து சமாஜ்வாதி மூத்த தலை​வர் ராம் கோபால் யாதவ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “வாக்கு வங்கி அடிப்​படை​யில் காங்​கிரஸுக்கு 26 தொகுதி​களை வழங்க சமாஜ்வாதி விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. அதில், கடந்த தேர்​தலில் சமாஜ்வாதி கட்சி 60,000 முதல் 70,000 வாக்​கு​கள், காங்​கிரஸ் சுமார் 2,000 வாக்​கு​கள் பெற்ற 20 வலு​வான தொகுதி​களும் அடங்​கும்.முன்​மொழியப்​பட்​டுள்ள இந்த தொகுதி​கள் குறித்து விரிவாக விவாதிக்​கப்​படும்” என்​றார். தொகுதிப் பங்​கீடு குறித்து காங்கிரஸ் எம்.பி. இம்​ரான் மசூத் கூறும்​போது, “தொகுதி​களைக் ‘கோரு​வதற்​கும்’ ‘ஒத்​துழைப்​ப​தற்​கும்’ வித்​தி​யாசம் உள்​ளது. ஒரு கூட்​ட​ணிக்​குள் எதையும் கட்​டாயப்​படுத்​திக் கேட்க வேண்டியதில்லை; இது பரஸ்பர ஒத்​துழைப்பு சார்ந்த விஷயம். உள்ளே அமர்ந்து இது​குறித்​துப் பேசுவோம். கருத்து வேறுபாடுகளைப் பேச்சு​வார்த்தை மூலம் களைந்து, இருதரப்பினருக்​கும் ஏற்​புடைய, கவுரவ​மான உடன்​பாட்டை எட்டுவதே எங்களது நோக்​கம்” என்​றார்.