Home செய்திகள் தேசிய செய்திகள் சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸுக்கு இங்கிலாந்து செல்ல தடை

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸுக்கு இங்கிலாந்து செல்ல தடை

புதுடெல்லி: நவ. 25-
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) முதன்மை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், டெல்லி விமான நிலையத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், எடின்பர்க் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கரப்பான் இயக்கம் குறித்து உரையாற்ற திட்டமிட்டிருந்தேன். இதற்காக இங்கிலாந்து செல்ல முயன்ற எனக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரப்பான் இயக்கம் குறித்துப் பேசுவதற்கான எனது வழியை மத்திய அரசு தடுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும், சவுரவ் தாஸின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த இடம் தவறாக ‘சென்னை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் லண்டனுக்குப் புறப்படவிருந்த நவம்பர் 23-ஆம் தேதி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.