
மண்டியா, அக். 31-
ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, பெலகோளா பம்ப்லைன் சாலை அருகே உள்ள வருணா கால்வாயில் நீந்தச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
மைசூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.இ. படித்து வந்த அர்ஜுன் என்பவரே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஆவார். அவருடன் சென்ற பார்த்தசாரதி என்ற மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
நேற்று நண்பர்களுடன் சேர்ந்து வருணா கால்வாயில் குளிக்கச் சென்றபோது, நீரில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அர்ஜுனின் சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில், மாயமான பார்த்தசாரதியைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.













