நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு

பெங்களூர் : டிசம்பர். 29 – வர்த்தூரில் உள்ள ஆடம்பர அதிநவீன மற்றும் பாதுகாப்பு கொண்டது என கூறப்படும் பிரபல பிரெஸ்டிஜ் அபார்ட்மென்டின் வளாகத்தில் 10 வயது சிறுமி ஒருவள் மின்சாரம் தாக்கி இருந்துள்ளாள் . பிரெஸ்டிஜ் அபார்ட்மெண்டில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுமி இறங்கிய போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளாள் . இங்குள்ள நீச்சல் குளத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் மின்சாரம் தாக்கிய சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவள் இறந்துள்ளாள். மிகவும் நவீன வசதிகள் கொண்ட அபார்ட்மெண்டில் பாதுகாப்பு அலட்சியமே இந்த சிறுமியின் சாவுக்கு காரணமாகும். இந்த அபார்ட்மெண்டில் வசித்து வந்த பத்து வயது சிறுமி மான்யா என்பவள் நீச்சல் குளத்தில் இறங்கிய போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே சிறுமி இறந்து போயுள்ளாள். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் வரத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.தவிர இந்த சம்பவத்திற்கு அபார்ட்மெண்ட் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அபார்ட்மெண்ட் வாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக அபார்ட்மெண்ட் வாசிகள் தெரிவித்துள்ளனர்.