
பெங்களூரு, அக். 9- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி, பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் தேவனூரு மகாதேவா, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அபிஜித் திப்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஐ.ஆர். மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்களை நீக்கியுள்ளார். உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள்கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவரது மோசடியின் காரணமாகவே பாஜக கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த மோசடியால் பாஜகவை எதிர்த்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் தோல்வியடைந்தனர். வாக்குத் திருட்டின் மூலமாகவே மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். எஸ்.ஐ.ஆர். மூலம் அவர் ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டார். இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தையும் ஜனநாயகத்தையும் மோடியிடமிருந்து மீட்டெடுப்போம்” என்றார்.














