Home விளையாட்டு அந்த 7 நிமிடங்கள்…

அந்த 7 நிமிடங்கள்…

60 ஆண்டு கால கனவு பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. அட்லாண்ட்டாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டத்தின் 84-வது நிமிடம் வரை 1-0 என்று முன்னிலை பெற்று, இறுதிப் போட்டி கனவுடன் 60 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரும் எத்தனம் அடுத்த 7 நிமிடங்களில் தவிடுபொடியாக அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது.முதல் பாதியில் இரு அணிகளின் உத்தியும் அட்டாக், அட்டாக் மேலும் அட்டாக் என்றே இருந்தது. ஒரு வீரருக்கு ஒரு வீரர் என்ற அளவில் டேக்கிள் திட்டமிடப்பட்டு எதிரணியினரிடம் அட்டாக்கை எடுத்துச் சென்று இரு அணிகளும் ஆடியதால் ஆட்டம் உடல் ரீதியான மோதலாக இருந்தது, ஆனால் த்ரில்லிங்காக இருந்தது. முதல் பாதி முடியும்போது கோல்கள் கணக்கில் ஒன்றுமில்லை. ஆனால் ஃபவுல்கள் கணக்கில் அர்ஜெண்டினா 12 ஃபவுல்களையும் இங்கிலாந்து 7 ஃபவுல்களையும் செய்திருந்தன.
உலகக் கோப்பை அரையிறுதி என்றால் சும்மாவா? அர்ஜெண்டின அனுபவம் என்றால் சும்மாவா? அதுவும் ‘த்ரீ லயன்ஸை’ விடவும் ஆகிருதியான ‘லயன்’ மெஸ்ஸி இருப்பது என்ன சும்மாவா? – இப்படி இங்கிலாந்து பார்மி ஆர்மி ரசிகர்கள் கும்பலுக்கு அர்ஜெண்டின ரசிகர்கள் தொடர்ந்து நினைவுபடுத்திய வண்ணம் இருந்தனர் என்பது அர்ஜெண்டீனா மீது அந்நாட்டு ரசிகர்கள் வைத்திருந்த அபார நம்பிக்கையையே காட்டுகிறது இங்கிலாந்தை அர்ஜெண்டினா வீட்டுக்கு அனுப்பிய, கனவைத் தகர்த்த அந்த 7 நிமிடங்களும் கூட லயன் மெஸ்ஸிக்குச் சொந்தமானதுதான். என்சோ பெர்னாண்டஸ் 20 அடி தூரத்திலிருந்து அடித்த இடி போன்ற ஷாட், அபார கோல் கீப்பர் பிக்ஃபோர்டை ஏமாற்றி வலைக்குள் சென்ற தருணம் சமநிலை கோலின் முக்கியத் தருணம் என்றால், அந்த கோலுக்கு முக்கியக் காரணியாக உதவி புரிந்தவர் மெஸ்ஸி.
இது நடந்தது 85-வது நிமிடத்தில். பிறகு 90 நிமிடம் கழிந்து எக்ஸ்ட்ரா டைம் 2-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி அருமையாக இங்கிலாந்து தடுப்பரணை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கிராஸ் செய்ய, மார்ட்டினேஸ் தலையால் முட்டி அடித்த கோல் இங்கிலாந்தின் சவப்பெட்டிக்கு ஆணியறைந்தது.அட்டாக்கிங்கில் இருந்து தடுப்பாட்டத்துக்கு மாறிய இங்கிலாந்தின் அந்த 7 நிமிடக் கோளாறு:ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் இரு அணிகளும் அட்டாக்கிங் தெரிவை மேற்கொண்டு நடுக்களத்தில் மோதி ரைட் விங், லெஃப்ட் விங் என்று கோல் நோக்கி முன்னேறி எதிரணியினரின் பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து வந்த தருணம். அப்போது இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனின் டீப் பாஸ் ஒன்று மற்றொரு இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸிடம் வர, அப்போது மற்றொரு இங்கிலாந்து வீரர் மார்கன் ராஜர்ஸ் ரைட் விங் பக்கம் செல்ல, ரைஸின் பந்தை ராஜர்ஸ் அற்புத கிராஸ் செய்ய அதை ஆந்தனி கார்டன் அமைதியாக கோலுக்குள் செலுத்தினார்.