
சென்னை: ஜூன் 17-
“2026 தேர்தல் கைகூடவில்லை என்றால் என்ன? 2031 இருக்கிறது” என்ற மனநிலையில்தான் தற்போது தமிழகத்தில் பாஜக தனது அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவித்ததாக கூறப்படும் சில கருத்துகள், தமிழக பாஜக தலைவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.. தமிழகத்தில் திமுக – அதிமுக ஆகிய இருபெரும்
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் பாஜக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் வளர்ச்சி கிடைக்கவில்லை.
2026 தேர்தல் பாஜக படுதோல்வியை சந்தித்தது. மோடி – அமித் ஷாவின் வியூகங்களும் கைகொடுக்கவில்லை. அதனால்தான் உடனடி வெற்றியை விட நீண்டகால அரசியல் திட்டத்துடன் முன்னேற வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளதாம்.
அதற்கு முக்கிய காரணமாக மேற்கு வங்கத்தை காட்டியுள்ளார் அமித் ஷா.பல ஆண்டுகளாக அசாமில் வேறு சில கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய மாநிலத்தில் தற்போது பாஜக வலுவான ஆட்சியை அமைத்துள்ளது. கேரளாவிலும் முன்பு இல்லாத அளவுக்கு கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. “இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்திலும் அதேபோன்ற வளர்ச்சியை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை அமித் ஷா வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தை பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தல் பல கட்சிகளின் கணிப்புகளையே மாற்றியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்டை உருவாக்கியது. இளைஞர் வாக்காளர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் பல கட்சிகள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த சூழலை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.





















