Home செய்திகள் தேசிய செய்திகள் தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?

தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?

லக்னோ: ஜூன் 20-
உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர், அவரது குடும்​பத்​தார் கைது செய்​யப்​பட்​டனர்.
அப்​போது அந்​தப் பெண்​ணின் தங்க நகைகளை பறி​முதல் செய்த போலீ​ஸார் அவற்றை போலீஸ் நிலைய காப்பக அறை​யில் வைத்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்​ர​வரி மாதம் பெண்​ணின் கணவர் விடுவிக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்​தி​லுள்ள தங்க நகைகளை தங்​களிடம் தரு​மாறு கணவர், நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​தார்.
அப்​போது போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில் கூறிய​தாவது: கடந்த 2013-ல் கடும் மழை பெய்​த​ போது காப்பக அறை​யில் துணி​யால் சுற்றி வைக்​கப்​பட்​டிருந்த தங்க நகைகள் நனைந்​து​விட்​டன.
அவற்றை உலர வைப்பதற்காக காப்பக அறை​யின் மேல் திறந்​தவெளி​யில் வைத்​திருந்​தோம்.
அப்​போது அறை​யின் மேல்​பகு​திக்கு எங்​கிருந்தோ வந்த குரங்​குக் கூட்​டம் தங்க நகைளை வீசி எறிந்​தும், உடைத்​தும் பாழ்படுத்திவிட்​டன. மேலும் தங்க நகைகளை குரங்​கு​களே எடுத்துச் சென்​று​விட்​டன. அந்த தங்க நகைகளை எங்​களால் மீட்க முடிய​வில்​லை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது.