Home மாவட்டங்கள் சென்னை அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு

அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு

சென்னை, நவ. 27-
தமிழக அரசு ஆண் பணியாளர்களுக்கு முதல் முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்களிடமிருந்து கோரிக்கை வந்தது. குழந்தை பிறக்கும் காலகட்டம் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
அந்த நேரத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசு பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது, தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல்,
ஆண் அரசு பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவது, குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.