Home செய்திகள் தேசிய செய்திகள் ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

கர்னூல்: ஜூன் 25–-
ஆந்​தி​ரா​வில் ஜொன்​னகிரி தங்​கச் சுரங்​கத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று திறந்து வைத்​தார்.
ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டம், துக்​காலி மண்​டலம், ஜொன்னகிரி பகு​தி​யில் புதிய தங்​கச் சுரங்​கம் செயல்​பாட்​டுக்கு வந்துள்ளது. இது இந்​தி​யா​வின் முதல் தனி​யார் தங்​கச் சுரங்​கம் ஆகும்.
இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று திறந்​து​வைத்​துப் பேசி​ய​தாவது: ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​வது இந்த ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பெல்லாம் சுவர்​ணகிரி என்று அழைத்​தனர். அசோக சக்​கர​வர்த்​தி​யின் 4-வது தலை நகரம் இது​வாகும்.
பல நூறு வருடங்​களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்​தின கற்​கள், தங்​கம் போன்​றவற்றை கொட்டி விற்பனை செய்​வார்​கள். அசோகர் காலத்து சாசனங்​கள் இதை நமக்கு தெரிவிக்​கின்​றன.
ஒரு காலத்​தில் கேஜிஎஃப் தங்​கச் சுரங்​கம் குறித்து நாடு முழு​வதும் பரவலாக பேசப்​பட்​டது. ஆனால் இப்​பொழுது ஜொன்​னகிரி குறித்து நாடு முழு​வதும் பேசப்​படு​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு டன் தங்​கம் வெட்டி சுத்​தம் செய்​யப்​படும். ஆரம்​பத்​தில் 400 கிலோவில் தொடங்கி போகப்​போக 1,000 கிலோவுக்கு வரும். தற்போது இங்கு 800 ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்​கள் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்​கள் பணி செய்​வார்​கள். ட்ரோன் சிட்டி: ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் ஒரு ‘பி​ராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்​கப்​படும். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன் வரு​கின்​றனர். நாட்​டிலேயே மிகப்​பெரிய ட்ரோன் சிட்டி ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்ற கிளை வர உள்​ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்பு தொழிற்​சாலை அமை​யும். இவ்​வாறு சந்திர​பாபு நா​யுடு பேசி​னார்​.