Home விளையாட்டு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு

ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு

அகம​தா​பாத், ஜூன் 2- ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி சாம்​பியன் பட்​டத்தை தக்கவைத்​துக் கொண்​டது ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்சிபி அணி. இந்த தொடரில் ரஜத் பட்டிதார் 192.69 ஸ்டிரைக் ரேட்​டுடன் 501 ரன்​கள் விளாசி சிறந்த பங்​களிப்பை வழங்கியிருந்தார். இறு​திப் போட்​டிக்கு பின்​னர் ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்டி​தார் கூறிய​தாவது: கடந்த ஆண்டு எங்​களுக்கு மிகப்​பெரிய அழுத்​தம் இருந்​தது. ஆனால் இம்​முறை தொடர் முழு​வதும் நாங்கள் விளை​யாடிய விதம் காரண​மாக, நிதான​மாக​வும் அமைதி​யாக​வும் இருந்​தது. இந்த ஆண்டு நாங்​கள் சாதா​ரண​மாக விளை​யாட​வில்​லை, ஒட்டுமொத்த தொடரை​யும் எங்​களது ஆதிக்​கத்​தின் கீழ் வைத்திருந்தோம். இதே போல் தொடர்ந்து விளை​யாடி​னால், நிச்சய​மாக 2-வது முறை​யாக சாம்​பியன் பட்​டத்தை வெல்​வோம் என்​ப​தில் நாங்​கள் மிக​வும் நம்​பிக்​கை​யுடன் இருந்​தோம். அடுத்ததாக நாங்​கள் 3-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வெல்வது எப்​படி என்​ப​தில் அதிக கவனம் செலுத்த வேண்​டும். எனது கேப்​டன்சி முறை சற்று வித்​தி​யாச​மானது. நான் மைதானத்தில் உணர்ச்​சிகளை அதி​கம் வெளிப்​படை​யாகக் காட்டிக் கொள்ள மாட்​டேன், ஆனால் அதே சமயம் போட்​டி​யின் சூழ்​நிலையை முழு​மை​யாக உணர்ந்​திருப்​பேன். விராட் கோலியை பற்றி விவரிக்க எனக்கு வார்த்​தைகளே இல்​லை. மாபெரும் சிறந்த வீர​ரான அவர், எப்​போதும் சிறந்த செயல்​களை செய்​வதையே வழக்​க​மாகக் கொண்​ட​வர்.மைதானத்​துக்கு உள்​ளே​யும் சரி, மைதானத்​துக்கு வெளி​யே​யும் சரி, அவரிட​மிருந்து கற்​றுக்​கொள்​வதற்​கான வாய்ப்பு எங்​கள் அனை​வருக்​கும் கிடைத்​துள்​ளது. நான் அவரைப் பார்க்​கும் போதெல்​லாம், அவர் எப்​போதும் அணிக்​காக​வும் அனைத்து வீரர்களுக்​காக​வும் முன்​னிற்​கிறார். ஆர்​சிபி அணிக்​காக நான் 2 ஐபிஎல் கோப்​பைகளை வெல்​வேன் என்று கனவில் கூட நினைத்​துப் பார்க்​க​வில்​லை. நாங்​கள் வெற்றி பெற வேண்​டும் என முன்பே எழுதப்​பட்​டுள்​ளது. வெற்றி கோப்பையை கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் இறந்​தவர்​களுக்கு அர்ப்​பணிக்க விரும்​பு​கிறேன். அந்த உணர்​வை வெளிப்​படுத்​த வார்த்தைகளே இல்​லை. இவ்​வாறு ரஜத்​ பட்​டி​தார்​ கூறி​னார்​.