Home விளையாட்டு இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா

இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா

அட்லாண்டா, ஜூலை 17- பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வில் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்தை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி ஆட்​டம் விறு​விறுப்​பாக இருந்​தது, ஆனால் கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள் மிகக் குறை​வாகவே அமைந்தன. இரு அணி​களும் ஒன்​றையொன்று மிகச் சரி​யாக எதிர்​கொண்டு தடுத்​த​தால் கடுமை​யான உத்​தி​களுக்​கான போராக மாறியது. 33-வது நிமிடத்​தில் இங்கிலாந்து அணி​யின் டெக்​லான் ரைஸ் வீசிய ஃபிரீ-கிக்கை ஜான் ஸ்டோன்ஸ் கோல் கம்​பத்​துக்கு அருகே தலையால் முட்டி கோல் அடிக்க முயன்​றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்​க​வில்​லை. இது மிக நெருக்​க​மான கோல் வாய்ப்பாக அமைந்​தது. முதல் பாதி ஆட்​டத்​தில் இரு அணி​கள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. 2-வது பாதி ஆட்​டம் தொடங்​கிய 10-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி தனது முதல் கோலை அடித்​தது. 55-வது நிமிடத்​தில் ஹாரி கேன் ஆடு​களத்​தின் பின் பகு​திக்கு வந்து மார்​கன் ரோஜர்ஸை நோக்கி பந்தை அனுப்ப முயன்​றார், ஆனால் அர்​ஜெண்​டினா வீரர் லிசாண்ட்ரோ மார்​டினெஸ் அந்​தப் பந்தை அந்​தரத்​தில் அக்​ரோ​பாட்​டிக் முறை​யில் தடுத்து வெளி​யேற்​றி​னார். அங்​கிருந்து தப்பிய பந்தை கைப்​பற்​றிய டெக்​லான் ரைஸ், அதை மீண்​டும் ரோஜர்​ஸிடம் அனுப்​பி​னார். ரோஜர்ஸ் கோல் பகு​தியை நோக்கி அடித்த அசாத்​தி​ய​மான கிராஸை, மொலி​னா​வுக்கு பின்​னால் இருந்து மின்​னல் போல் புகுந்த அந்​தோனி கார்​டன் அர்​ஜெண்​டினா அணி​யின் எமிலியானோ மார்​டினெஸைக் கடந்து மிக அழகாகக் கோலாக மாற்றினார். இதனால் இங்​கிலாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.