Home விளையாட்டு இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹா

இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹா

அசான், ஆக. 9- தென் கொரி​யா​வின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்​டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்​ராஜை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் அஷ்மிதா சாலிஹா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். பிடபிள்யூ உலக டூர் ஒற்​றையர் இறு​திப் போட்​டிக்கு அஷ்மிதா சாலிஹா முன்​னேறு​வது இதுவே முதன்​முறை​யாகும். உலகத் தரவரிசை​யில் 50-வது இடத்​தில் உள்ள அஷ்மிதா சாலிஹா இன்று நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் சீனா​வின் ஹான் கியான்​சி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். உலகத் தரவரிசை​யில் 35-வது இடத்​தில் உள்ள ஹான் கியான்சி அரை இறுதி சுற்​றில் ஒரு மணி நேரம் 5 நிமிடங்​கள் போராடி 22-20, 18-21, 21-14 என்ற செட் கணக்​கில் கொரி​யா​வின் கிம் கா-​ராமை வீழ்த்​தி​னார்​.