Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் தாக்குதல்குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

ஈரான் தாக்குதல்குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

துபாய்: ஜூலை 14-
அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் ராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.
அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் தொடர் வான்​வழித் தாக்​குதல்​களுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், ஈரான் கண்​ணுக்கு கண் அதாவது ‘பழிக்​குப்​பழி’ வாங்​கும் தனது ராணுவ நடவடிக்​கை​யின் மூன்​றாம் கட்​டத்​தைத் தொடங்​கி​யுள்​ளது.
ஈரான் தனது முதற்​கட்ட நடவடிக்​கை​யில் ஜோர்​டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்​படை தளத்​தைக் குறி​வைத்து தாக்​கியது. அங்​குள்ள அமெரிக்​கா​வின் பல ஆயுதக் கிடங்​கு​களும் எரிபொருள் நிலை​யங்​களும் தீக்​கிரை​யாக்​கப்​பட்​டன. 2-வது கட்​ட​மாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படை மற்​றும் விமானப்​படைக்​குச் சொந்​த​மான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது.
அதன் தொடர்ச்​சி​யாக நேற்று தனது மூன்​றாம் கட்ட தாக்​குதலை குவைத்​தில் நடத்​தி​யது. குறிப்​பாக, குவைத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் முக்​கிய ராணுவ தளங்​கள் மீது ஈரான் நேற்று ஏவு​கணைத் தாக்​குதல்​களை மேற்​கொண்​டது. இது, உலகளா​விய பாது​காப்பு மற்​றும் சர்​வ​தேச கச்சா எண்​ணெய் வர்த்​தகத்​துக்கு பெரும் அச்​சுறுத்​தலை உரு​வாக்​கி​யுள்​ளது.
இதுகுறித்​து, அனடோலு செய்தி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, குவைத்​தில் உள்ள அலி அல்​-சலேம் விமானப்​படை தளத்​தில் இருந்த அமெரிக்​கா​வின் ஏவு​கணை எதிர்ப்பு ‘பாட்​ரி​யாட்’ (Patriot) பாது​காப்பு அமைப்​பு​கள் மற்​றும் எரிபொருள் சேமிப்பு நிலை​யங்​கள் முற்​றி​லும் அழிக்​கப்​பட்​ட​தாக ஈரான் புரட்​சிகர ராணுவ படை (ஐஆர்​ஜிசி) அறி​வித்​துள்​ளது. மேலும், அகமது அல்​-ஜாபர் விமானப்​படை தளத்​தில் இருந்த அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​.பி.எஸ் ரேடார் அமைப்​பும் இந்​தத் தாக்​குதலில் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​பட்​டுள்​ளது.