Home செய்திகள் தேசிய செய்திகள் சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்

சவுதி: ஜூலை 14-
ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் – சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த தற்காலிக அமைதி முடிவுக்கு வந்துள்ளது. ஏமனின் வடக்கு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹவுதி தரப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முறிவடைந்துள்ளது. சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள் எப்படி ஊட்டிக்கு செல்கிறார்களோ.. அதேபோல் மலைப்பாங்கான எல்லையோரப் பகுதியான இங்கு, கோடை வெப்பத்தைத் தவிர்க்க ஏராளமான சவுதி மக்கள் திரள்வது வழக்கம். இங்குதான் ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது.
ஆனால் ஹவுதி அமைப்பினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தங்களின் வான் பாதுகாப்புப் படை நடுவானிலேயே தடுத்து அழித்துவிட்டதாக சவுதி அறிவித்துள்ளது. வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சனா விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து சவுதி அரேபிய அரசின் தகவல் தொடர்பு அலுவலகம் உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் முன்னதாக, ஏமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு, ஏமன் அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. ஈரான் நாட்டு விமானம் ஒன்று அங்கு தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது. மேலும், ஏமனின் வான்வெளியை மீறும் எந்தவொரு எதிரி விமானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும்.. நிலைமை வரும் நாட்களில் கையை மீறி போனால் அதற்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஏமன் அரசு எச்சரித்துள்ளது. ஈரானே பொறுப்பேற்க வேண்டும் – ஏமன் எச்சரிக்கை இதற்கு பதிலடி தரும் விதமாகவே ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் – சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த தற்காலிக அமைதி முடிவுக்கு வந்துள்ளது.