Home செய்திகள் தேசிய செய்திகள் நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜூலை 14-
ராமர் கோயில் நன்​கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்​காணிப்​பில் சிபிஐ தலை​மை​யில் சிறப்பு புலனாய்​வுக் குழு விசா​ரணை நடத்த உத்​தர​விடக் கோரி வழக்கறிஞர்​கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் ராய் உச்​ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.
ஆர்​ஜேடி எம்பி சுதாகர் சிங், இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசாரணை வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கையை வலியுறுத்தி மனு தாக்​கல் செய்​துள்​ளார். வழக்​கறிஞர் நரேந்​திர குமார் கோசு​வாமி, மதுரையைச் சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத்​தின் கே.கே. ரமேஷ் சார்பிலும் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.
இந்த 4 மனுக்​களும் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்தன. அயோத்தி ராமர் கோயில் நன்​கொடை முறை​கேடு தொடர்பாக உத்தர பிரதேச அரசு அமைத்​துள்ள சிறப்பு விசாரணைக் குழு அதன் நிலை அறிக்​கையை சீலிட்ட உறை​யில் தாக்​கல் செய்ய வேண்​டும். மேலும் மனுக்​கள் தொடர்​பாக அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பதில் அளிக்க வேண்டும் என்​றும் உச்​ச நீ​தி​மன்​றம்​ உத்தரவிட்டுள்ளது.