Home செய்திகள் தேசிய செய்திகள் உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை: கபில் சிபல்

உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை: கபில் சிபல்

டெல்லி, அக். 11-
குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு எதிராக டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டங்களை காவல்துறை முடக்கிய விவகாரம் குறித்து அவர் இந்தக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கபில் சிபல், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார். அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு இருந்தாலும், நீதிமன்றத்தின் மீது தமக்கு இனி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.