Home செய்திகள் தேசிய செய்திகள் எப்சிஆர்ஏ திருத்த மசோதா ஆய்வு

எப்சிஆர்ஏ திருத்த மசோதா ஆய்வு

புதுடெல்லி: செப். 4-
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா முதன் முதலில் 1976-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியிலும் மேலும் சில கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன. தற்போதைய சட்ட திருத்தம் மூன்று முக்கிய மாற்றங்களுடன் கடந்த மார்ச் மாதத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரின் போது மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்தது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 31 பேர் கொண்ட கூட்டுக்குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிக்கிறார். எப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா குறித்து குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.