Home செய்திகள் தேசிய செய்திகள் எம்எல்ஏ.க்களை தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக 16 திரிணமூல் எம்.பி.க்கள் போர்க்கொடி

எம்எல்ஏ.க்களை தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக 16 திரிணமூல் எம்.பி.க்கள் போர்க்கொடி

கொல்கத்தா, ஜூன் 9-
தேர்​தல் தோல்​வியை அடுத்து திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யில் பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்கி தனி அணி​யாக பிரிந்தனர். இந்​நிலை​யில் திரிண​மூல் எம்​.பி.க்​கள் 16 பேர், மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரியை நேற்று சந்​தித்​தனர்.மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் வெறும் 80 இடங்​களில் மட்​டுமே வென்று ஆட்​சியை இழந்​தது. தேர்தல் தோல்விக்​குப் ​பின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் பிளவு ஏற்பட ஆரம்​பித்​தது. 59 எம்​எல்​ஏக்​கள் மம்​தாவுக்கு எதி​ராக போர்க்கொடி தூக்கி தனி அணி​யாக உரு​வா​கினர். பெரும்​பான்மை அடிப்​படை​யில் அவர்​களில் ரிதப்​ரதா பானர்ஜி என்​பவருக்கு எதிர்க்​கட்சி தலை​வர் அந்​தஸ்து வழங்​கப்​பட்​டது. இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்​லி​யில் இருந்தார். அப்​போது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 16 எம்.பி.க்​கள் சுகேந்து ரே மற்​றும் ககோலி தஸ்​திதர் தலை​மை​யில் மாநில முதல்​வர் சுவேந்து அதி​காரியை நேற்று சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு பாஜக அமைச்​சர் ஒரு​வர் வீட்​டில் நடை​பெற்​றது. இவர்​கள் தங்​களை தனி அணி​யாக மக்​களவை​யில் அமர வைக்கும்​படி மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த 16 எம்​.பி.களில் சேகர் ராய் மட்​டும் மாநிலங்​களவை உறுப்பினர். மற்ற 15 பேரும் மக்​களவை உறுப்பினர்கள். பெரும்​பான்மை அடிப்​படை​யில் தனி அணி​யாக உரு​வாக 19 மக்​களவை உறுப்​பினர்​கள் தேவை. இல்லையென்றால் கட்சி தாவல் நடவடிக்​கையை சந்​திக்க நேரிடும். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் ஏற்​கெனவே 23 எம்​.பி.க்​கள் அதிருப்தி எம்​.எல்​.ஏ.க்​களு​டன் தொடர்​பில் இருந்​தனர். இதனால் இவர்​கள் தனி அணி​யாக உரு​வாக வாய்ப்​புள்​ளது. அவ்​வாறு தனி அணி​யாக உரு​வா​னால் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதி என கூறப்​படு​கிறது.
சுகேந்து சேகர் ராஜினாமா: இந்​நிலை​யில் திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி சுகேந்து சேகர் ராய் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். மம்தா பானர்ஜி தலை​மையி​லான அரசு ஊழலிலும், பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை​களி​லும் ஈடு​பட்​ட​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார்.