
பெங்களூர்: அக். 1-
வாக்களிப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், பாஜகவினர் ‘எஸ்.ஐ.ஆர்’
(SIR) என்ற சாக்கை வைத்துக்கொண்டு மக்களிடமிருந்து அந்த உரிமையைப் பிடுங்கி எறிகிறார்கள் என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஏழை எளிய மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் நோக்கத்தில், தவறான தகவல்களுடன் ‘படிவம்-7’ (Form-7) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.













