Home செய்திகள் தேசிய செய்திகள் எஸ்​.சி, எஸ்​.டி பிரி​வினருக்கு ‘கிரீமிலேயர்’ அமல்படுத்த முடி​யாது: மத்திய அரசு

எஸ்​.சி, எஸ்​.டி பிரி​வினருக்கு ‘கிரீமிலேயர்’ அமல்படுத்த முடி​யாது: மத்திய அரசு

புதுடில்லி, ஆக. 7- எஸ்​.சி, எஸ்டி சமூக பிரிவு​களில் பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய​வர்​களை ‘கி​ரீமி லேயர்’ என வகைப்​படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்​கக்​கோரிய மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டுமென்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்​கல் செய்​துள்​ளது. இட ஒதுக்​கீட்​டுக்​கான பலன்​கள் ஏழை மக்​களைச் சென்றடைவதை உறு​தி​செய்​யும் வகை​யில், கொள்​கைகளை வகுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்டது. அதில், பட்​டியலின, பழங்​குடி​யின வகுப்​பில் (எஸ்​சி, எஸ்​டி) உள்ள பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய​வர்​கள், இடஒதுக்​கீட்​டின் அடிப்​படை​யில் பலன்​களைப் பெற்​று​விடு​கின்​றனர். ஆனால், அதே சமூகத்​தில் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய​வர்​கள் இடஒதுக்​கீட்​டின் பலனை பெறாமல் உள்​ளனர். இது​ இடஒதுக்​கீட்​டின் நோக்​கத்​தையே சிதைக்​கிறது. எனவே, பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய​வர்​களை இடஒதுக்​கீடு பலனில் இருந்து நீக்​க​வும் மத்​திய அரசுக்கு உத்​தர​விட கோரப்​பட்​டிருந்​தது. இந்த வழக்​கானது உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, மத்​திய அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​தது இந்​நிலை​யில் இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தில் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​துள்ள மத்​திய சமூக நீதி மற்​றும் அதி​காரமளித்​தல் அமைச்​சகம், எஸ்​.சி, எஸ்​.டி, பிரி​வினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் வரு​மானம் அடிப்​படை​யில் முன்​னுரிமை அளிக்க வேண்​டும் என்​பதை எதிர்ப்​ப​தாக தெரி​வித்​துள்​ளது. ‘கி​ரீமி லேயர்’ விலக்கு என்​பது பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினருக்​குப் பொருந்​தாது என்​றும், அரசி​யல் சாசனத்​தின் பிரிவு​கள் 341 மற்​றும் 342-ன் கீழ் பட்​டியல் சாதி​யினர், பழங்​குடி​யினரை வகைப்​படுத்த நாடாளு​மன்​றத்​தால் மட்​டுமே முடி​யும் எனவும் நீதி​மன்​றங்​களுக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் மனுவை தள்​ளு​படி செய்​ய வேண்​டும்​ என்றும் மத்​திய அரசு தெரிவித்​துள்ளது.