Home செய்திகள் தேசிய செய்திகள் “மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி

“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி

புதுடெல்லி, ஆக. 7- உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா நகரிலும், உத்தராகண்ட்டின் டேராடூனிலும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியை நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார். பிரயாக்ராஜில் உள்ள காயஸ்தா பாடசாலா அறக்கட்டளைக்குச் சொந்தமான மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அனுமதியை காயஸ்தா பாடசாலா அறக்கட்டளை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் பொறுப்புத் தலைவர் ஜிதேந்திரநாத் சவுத்ரி, “காயஸ்தா பாடசாலா கல்லூரி மைதானத்தை விளையாட்டு மற்றும் கல்விச் செயல்பாடுகளைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்று கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், மைதானத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால், பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு அது பாதுகாப்பானது அல்ல. எனவே, அனுமதி ரத்து செய்யப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.