Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடக அமைச்சர்கள் இலாகா விவகாரம் எம்.பி. பாட்டீல் விளக்கம்

கர்நாடக அமைச்சர்கள் இலாகா விவகாரம் எம்.பி. பாட்டீல் விளக்கம்

பெங்களூரு: ஜூன் 10 –
அமைச்சரவையில் இலாகாக்கள் பகிர்வு மற்றும் அமைச்சர்களின் அதிருப்தி குறித்து பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவையே என பெரு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடாவின் இலாகா மாற்றம் குறித்த சர்ச்சை பற்றிக் கருத்து தெரிவித்தார். “கிருஷ்ண பைரே கௌடா மீது அதிருப்தி நிலவுவதாக ஊடகங்கள் உருவாக்கும் செய்தி, முற்றிலும் ஊடகங்களால் புனையப்பட்டது. இதுகுறித்து அவரும் எந்த எதிர்மறையான பதிலையும் அளிக்கவில்லை. அப்படி ஏதேனும் குழப்பம் இருந்தால், காங்கிரஸ் மேலிடம், முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் அமர்ந்து பேசி அதைத் தீர்த்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சுமுகமாகக் கையாளும் சக்தி கட்சிக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.கடந்த காலங்களில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி விஷயத்திலும் இதேதான் செய்யப்பட்டது, ஆனால் இறுதியில் எல்லாம் தீர்க்கப்படவில்லையா? என்று ஊடகங்களிடம் கேள்வி எழுப்பிய அவர், புதிய அரசாங்கம் வரும்போது அனைத்தும் தீர்க்கப்படுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்றும் கூறினார். கர்நாடக மாநில புதிய மந்திரி சபையில் அமைச்சர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கா திருப்தி அளிக்கவில்லை என்று கூறி வருவதாகவும் இதனால் புதிய முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது இந்த நிலையில் அமைச்சர் மேற்கண்ட விளக்கத்தை அளித்து இருக்கிறார்