
பெங்களூர்: ஆகஸ்ட் 25-
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 4.46 கோடி பேரின் இடம்பெற்றுள்ள நிலையில் 1.08 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இதில் மொத்தம் 4.46 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 1.08 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவத்தை வீட்டுக்கு கொடுக்க சென்றபோது அங்கு பொதுமக்கள் இல்லாதவர்கள், வேறு முகவரிக்கு குடிபெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குரியை, இறப்பு உள்பட பிற காரணங்களால் 1.08 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை தவறாக பெயர் நீக்கப்பட்டு இருந்தால் பொதுமக்கள் மீண்டும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதற்கான நடைமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ம் தேதி வரை இதற்கு ‘டைம்’ வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவரின் பெயர் நீக்க்பட்டால் அவர்கள் ‘பார்ம் 6’, வெளிநாட்டில் வசிப்போர் என்றால் (ஓவர்சிஸ் வோட்டர்ஸ்) என்றால் பார்ம் – 6ஏ ஆகியவற்றை பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். அதேவேளையில் ஒருவர் இறந்திருந்து அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அதனை நீக்கம் செய்ய பார்ம் – 7, முகவரி மாற்றத்துக்கு பார்ம் 8 உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
இதனை ERO எனும் Electoral Registration Officers-யிடம்வழங்க வேண்டும். அவர்கள் ஆய்வு செய்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றைசெய்வார்கள். அதன்பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
இதற்கு ஒவ்வொருவரும் பிறந்த சான்று, பாஸ்பார்ட், பள்ளி கல்வி சான்று, முகவரி சான்று, ஜாதி சான்று, அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.













