Home செய்திகள் தேசிய செய்திகள் இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்திய துருவ் ஜூரல்

இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்திய துருவ் ஜூரல்

கொழும்பு: ஆகஸ்ட் 25-
இலங்கை அணிக்கு எதிரான கொழும்பு டெஸ்டில், துருவ் ஜூரல் சதம் (115 ரன்) விளாச, இந்திய அணியில் ஆதிக்கம் தொடர்கிறது.இந்திய வீரர் துருவ் ஜுரல் நேற்று சதம் அடித்ததும், தனது இடது கையின் மேலே ஹிந்தி மொழியில் பச்சை குத்தியிருந்த (டாட்டூ) ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை ‘கேமரா’ முன் காண்பித்து மகிழ்ந்தார்.
‘இந்திய ராணுவ வீரர்கள், விவசாயிகளை’ போற்றும் இந்த வாசகம் இவரது தேசப்பற்றை உணர்த்தியது. இவரது தந்தை ராணுவ வீரர். இவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, போட்டியில் சாதிக்கும் போது ‘சல்யூட்’ அடிப்பார்.
நேற்றும் அரைசதம் அடித்த போது ‘சல்யூட்’ அடித்தார்.ஜுரல் கூறுகையில்,’’எனது தாத்தா ஒரு விவசாயி, தந்தை ராணுவ வீரர். எனது வேர்களை மறக்க விரும்பவில்லை. அவர்களை வணங்கும் விதமாகவே சதம் அடித்ததும், அப்படி கொண்டாடினேன்,’’என்றார்.