Home செய்திகள் உலக செய்திகள் இந்தியாவுக்கு உர விநியோகம்ரஷ்ய அதிபர் புடின் உறுதி

இந்தியாவுக்கு உர விநியோகம்ரஷ்ய அதிபர் புடின் உறுதி

மாஸ்கோ: ஆகஸ்ட் 25-
‘’இந்தியாவின் உரப் பிரச்னையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்; வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் ‘’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு வருகை தருகிறார். தற்போது ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து, பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.இந்தச் சந்திப்பில், இந்தியாவுக்கான உர விநியோகத்தைத் தொடர புதின் உறுதியளித்தார். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா – ரஷ்யா இடையே உறவை வலுப்படுத்து குறித்தும் ஆலாசனை நடத்தினர்.
ரஷ்ய அதிபர் புடின் செப்டம்பர் 12ம் தேதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே மோடியும், புடினும் சந்திப்பார்கள்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறையில் உறவுகள் குறித்தும், உரங்கள் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்தியதோடு, இந்திய விவசாயிகளுக்கும் நாட்டின் விவசாயத் துறைக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது
ரஷ்யா தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தி வருகிறது, மேலும் அதைத் தொடரவும் தயாராக உள்ளது. அணுசக்தி, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறிய சரிவுக்குப் பிறகு, வர்த்தகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
ரஷ்யா-இந்தியா உறவுகளின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணிப்பதில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் இருக்கிறார். இதற்கான பெருமை பெரும்பாலும் அவருக்கே சேரும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் அவரைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.