
புதுடெல்லி, அக்.11-
நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டிய, சக்தியின் வடிவமாக விளங்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி உற்சவம், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா, கோலாகலமாகத் தொடங்கியுள்ள தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில் மற்றும் வீடுகளில் கொலு படிகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் களைகட்டியுள்ளன.
இந்தநிலையில், ‘கற்பூர நாயகியே’ என்ற தமிழ் பக்தி பாடலை பகிர்ந்து நவராத்திரி விழா வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. எக்ஸ் தள பதிவில்,
நவராத்திரி நாளில் அமைதியின் வடிவமான இறைவனுக்கு கோடிக்கணக்கான வணக்கங்கள். அன்னையின் தெய்வீக அருள் அனைவரின் இதயங்களிலும் பொறுமை, தன்னம்பிக்கையை தரட்டும். அன்னையின் ஆசிர்வாதங்கள் நாட்டு மக்கள் மீது என்றென்றும் நிலைத்திருப்பதே என் விருப்பம் என அதில் பதிவிட்டுள்ளார்.













