
சென்னை, அக். 25- வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 26) காலை புயலாக மாறலாம். இது, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஆந்திர கடலோர பகுதிக்கு அருகில், வரும், 28ம் தேதி காலை நகரும்.மணிக்கு 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். படகுகளை கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.
புயல் எச்சரிக்கை கூண்டு
* சென்னை,
* கடலூர்,
* ராமேஸ்வரம்,
* பாம்பன்,
* புதுச்சேரி,
* காரைக்கால்,
* தூத்துக்குடி
ஆகிய 9 துறைமுகங்களில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.













