
புதுடெல்லி: செப்டம்பர் 4-
பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) வெளியிட்ட உத்தரவின் அதிகாரத்தை சந்தேகிக்கும்விதமாக, நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மஹிரா சூட் மற்றும் அபிஷேக் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர் ஆஜராகி, “பிசிஐ தலைவர் எந்த அதிகாரத்தின் கீழ் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை ஆராய்வது அவசியம்” என வாதிட்டார்.
பிசிஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா, “தான் பிறப்பித்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட்டதாகவும், பிசிஐ கூட்டத்துக்குப் பிறகு அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவும்” நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் பல்வேறு சட்ட ரீதியான கேள்விகளை எழுப்புவதால், நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.












