Home மாவட்டங்கள் பெங்களூர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

சென்னை: செப்டம்பர் 4-
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இத்திட்டம் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் உதவும்.இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம் மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற போட்டிகள் நடத்துவதற்கான அவசர வசதிகள் உருவாக்கப்படும்.
இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தமிழகத்தை சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்கவும், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.