Home மாவட்டங்கள் பெங்களூர் சென்னையில் ரூ.1,200 கோடியில்புதிய தலைமைச் செயலகம்

சென்னையில் ரூ.1,200 கோடியில்புதிய தலைமைச் செயலகம்

சென்னை: செப்டம்பர் 4-
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்காக மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கம். இந்த இடங்களில் இறுதி முடிவை இம்மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்டி பகுதி லோக் பவனுக்கு எதிரே அமைந்திருப்பதால் எளிதில் அணுகக்கூடியது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அருகிலிருப்பதால் மாணவர் நெரிசல் கேள்விக்குறியாகிறது. பட்டினப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் சவாலாக இருக்கும், மேலும் நந்தம்பாக்கம் நகரின் மையத்தில் இருப்பதால் சாலைகள் அகலமில்லை என்றாலும் மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.
தற்போது, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயல்படும் தலைமைச் செயலகம் இடமின்றி சிக்கல்களை சந்திக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து திறன்மிக்க நிர்வாகத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படும். இது உலகத் தரத்திலான வசதிகளுடன், பசுமைக் கட்டிடத் தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.
புதிய கட்டிடத்தில் போதுமான வாகன நிறுத்துமிடம், மாநாட்டு அரங்குகள், மக்கள் சேவை மையங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். வரலாற்று மரபுச் சின்னங்களாக கோட்டையின் பாரம்பரியக் கட்டிடங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் அடுத்த 100 ஆண்டுகளுக்கான நிர்வாக தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் புதிய கட்டிட வளாகம் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.