Home செய்திகள் தேசிய செய்திகள் சிந்து நதி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிக்கும் இந்தியா

சிந்து நதி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிக்கும் இந்தியா

புதுடெல்லி: செப்டம்பர் 1
மத்திய வெளிவுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க அல்லது தலையிட அந்த அமைப்புக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறி, உலக வங்கியால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இந்த நீதிமன்றத்தில் இந்தியா ஆஜராகவும் இல்லை; அதன் முந்தைய அறிவிப்புகளை ஏற்கவும் இல்லை.
இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ இந்த நடுவர் மன்றத்துக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்த முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.