Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாள வெள்ள பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

நேபாள வெள்ள பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

காத்மாண்டு: செப்டம்பர் 1
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது. நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் இருந்து, ஆற்றங்கரையோரங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை இன்னும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பெருவெள்ளத்தின் முதல் நாளிலிருந்து இந்தியா அனைத்து வழிகளிலும் நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. முதலில் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா, நேபாள அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு மீட்புக் குழுக்களையும், மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது.
மேலும், இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வகையில், 19 பேர் கொண்ட இந்திய தடயவியல் குழுவும் நேபாளம் சென்றுள்ளது. சிலிமே மற்றும் லாங்டாங்கில் உள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்களில் சிக்கியிருக்கும் நிலைமையில், அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இந்தியாவில் இருந்து சென்ற சிறப்பு நிபுணர்கள் குழு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.